சாய் டி.வி.யில் மூன்று வாரங்கள் அடியேனது பேட்டி ஒளிபரப்பானது.
துபாய் தோழி திருமதி சுமிதா ரமேஷ் அவர்கள் பேட்டி கண்டார்.
இதில் எனது ஆரம்ப கால வாழ்க்கை... பத்திரிகையுலக வாழ்க்கை... சொற்பொழிவுத் துறைக்குள் எப்படி வந்தேன்... சிலிர்க்க வைக்கும் ஆன்மிக அனுபவங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்து கொண்டேன். ஏற்கெனவே இரண்டு வார லிங்க்கைத் தந்திருந்தேன். இருந்தாலும், அதைக் காண இயலாத அன்பர்களுக்காக மீண்டும் அவற்றைத் தந்துள்ளேன்.
மூன்றாவது வாரப் பேட்டியில் பல அனுபவங்களைச் சொல்லி இருந்தேன். அதில் இரண்டு விஷயங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.
ஒன்று: ஆரம்பத்தில் முறையாக அனுஷ்டானம் செய்யாமல் இருந்த என்னை - தி.நகரில் ஒரு கடைக்காரர் மூலம் ஆட்கொண்டு அறிவுறுத்தியது. அதன் பின்தான் நித்தமும் மூன்று வேளைகள் அனுஷ்டானம் தொடர்ந்தது.
இரண்டு: இலங்கையில் ஒரு சுற்றுலாவில் இருந்தபோது இரவு கனவில் வந்து என் தலைமேல் குழந்தை வடிவில் ஏறி ஆட்கொண்டது (மூன்று முறை அடியேன் கனவில் பெரியவா வந்திருக்கிறார். அதில் இது என்னை மெய்சிலிர்க்க வைத்த அனுபவம். மற்ற இரண்டு அனுபவங்களை சந்தர்ப்பம் வரும்போது தெரிவிக்கிறேன்).