Mahasankara Matrimony







மகாசங்கரா மேட்ரிமோனி குடும்ப அன்பர்கள் அனைவருக்கும்

08/05/2020
அன்பான காலை வணக்கம்.

அனைவரும் நலம்தானே?

அனைவருக்கும் அனுஷ தின வாழ்த்துக்கள்.

'திருவாதிரை' என்றால், சர்வேஸ்வரன்; 'திருவோணம்' என்றால், மாலவன். அதுபோல் அனுஷம் என்றால், மகா பெரியவா.

இந்த நன்னாளில் அவரது திருவடிகள் பணிந்து வணங்குவோம். கொரோனா உட்பட அனைத்து அச்சுறுத்தல்களையும் விரட்டி அமைதியையும், ஆனந்தத்தையும் எல்லோருக்கும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

குறுகிய நாட்களிலேயே - துவக்கப்பட்ட சில நாட்களிலேயே - மகாசங்கரா மேட்ரிமோனி உங்கள் அமோக ஆதரவால் அபாரமான வெற்றியைக் கண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உங்கள் பலரின் விருப்பத்துக்கிணங்க Founder's Blog துவங்கப்பட்டுள்ளது. மகாசங்கரா மேட்ரிமோனி தளத்திலேயே இதையும் தாங்கள் பார்க்கலாம். அவ்வப்போது சில கருத்துக்களையும், திருமணம் தொடர்பான தகவல்களையும் தருகிறேன். அனுஷ தினமான இன்று மகாசங்கரா மேட்ரிமோனி தளத்திலேயே Founder's Blog உங்களது ஆதரவுடன் துவங்குகிறது.

மகாசங்கரா மேட்ரிமோனி தளத்தை உங்கள் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கான சேவையை மனதில் கொண்டு இந்தத் தளம் துவங்கப்பட்டுள்ளது. 30.6..2020 வரை முழுக்க முழுக்க இலவச சேவை.

தளம் செல்வதற்கான லிங்க்...

www.msmatri.com

www.mahasankaramatrimony.com

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் கோருகிறோம்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Founder, Mahasankara Matrimony.