Mahasankara Matrimony







தெரிந்த கடையிலேயே பொருள் வாங்குகிறோம்.

03/10/2020
தெரிந்த கடையிலேயே பொருள் வாங்குகிறோம்.

தெரிந்த டிபனையே விரும்பிச் சாப்பிடுகிறோம்.

தெரிந்த பாட்டையே அதிகம் கேட்கிறோம்.

தெரிந்த நண்பரிடமே நிறைய பேசுகிறோம்.

தெரிந்த பூங்காவிலேயே வாக்கிங் போகிறோம்.

தெரிந்த டிரைவரையே சவாரிக்கு அழைக்கிறோம்.

என்ன காரணம்?

எதுவுமே பழகி விட்டால் ஒரு சுகம்.

அதைத் தாண்டின வேறு சுகம், தெரியாத இடத்தில் இருந்தாலும், நம் மனம் ரசிக்க மறுக்கிறது. சந்தேகப்படுகிறது.

உலகம் பெரிது. நம் மனமோ சிறிது.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்