அன்புள்ள மகாசங்கரா மேட்ரிமோனி குடும்ப அன்பர்கள் அனைவருக்கும்,
இனிய வணக்கம்.
நலமாக இருக்கின்றீர்களா? என்றும் நலமே விழைகிறேன்.
தங்கள் மகள் மற்றும் மகனுக்குப் பொருத்தமான மணமகன் மற்றும் மணமகளைத் தேடி வரும் உங்களது தேவைகளை ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ இனிதே நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களது அன்பான பதில்கள் மூலம் தெரிந்து சந்தோஷம் கொள்கிறோம்.
கடந்த தமிழ்ப் புத்தாண்டு (14.4.2020) தினத்தன்று துவக்கப்பட்ட ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ குறுகிய காலத்தில் உங்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்று, சிறந்த திருமணத் தளம் என்ற நற்பெயரையும் எடுத்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான உங்கள் அனைவருக்கும் எங்கள் குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மெயில் மூலமாகவும், மொபைல் மூலமாகவும் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். என்றென்றும் உங்களது நலனை மட்டுமே முக்கியமாகக் கொண்டு எங்களது டீம் உரிய சேவைகளை வழங்கி வருகிறது. இதை மென்மேலும் பலப்படுத்த உள்ளோம்.
ஏற்கெனவே அறிவித்தது போல் வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தத் திருமணத் தளம் முற்றிலும் இலவசம். தொடர்ந்து இந்த சேவையை இலவசமாக வழங்குவதற்கு எங்களுக்கும் ஆசைதான். ஆனால், வெப்சைட் பராமரிப்பு, அலுவலக நிர்வாகம் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அறிவித்தது போல் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த சேவைக்காகப் பெறுவதாக உள்ளோம்.
இது குறித்த ஒரு அறிவிப்பு கூடிய விரைவில் உங்களை வந்தடையும். இதுவரை தாங்கள் எங்களுக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
‘மகாசங்கரா மேட்ரிமோனி’ வாயிலாக உங்கள் குடும்பத்தில் இனிதே திருமணம் நடந்தேற எல்லாம் வல்ல நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Founder, Mahasankara Matrimony