இன்றோடு இரண்டு மாதங்கள் ஆயிற்று!
ஆம்! ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ என்கிற அற்புதமான திருமணத் தளத்தைத் துவங்கி...
திருமணப் பரிவர்த்தனையில் ஒரு புது தளமாக - களமாக - மிகுந்த திட்டமிடுதலுடன் கடந்த ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கினோம். இந்த லாக் டௌன் பீரியடில் எல்லாமே ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன்தான் - இன்று வரை! எங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்திருப்பது, மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களது உழைப்பையும் பொறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
தளத்துக்குள் நுழைகிற எவரும் ‘இது போன்ற வசதிகளுடன் இத்தனை நவீனமான ஒரு மேட்ரிமோனி சைட்டை நாங்கள் பார்த்ததில்லை’ என்று பூரித்துப் போவது எங்களின் முயற்சிக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம், வெற்றி. லாக் டௌன் காலம் முடிந்ததும், பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பயணிக்க உள்ளோம். திருமணத் தேடல் உள்ள அனைவரையும் ஒரு இடத்தில் ஒருங்கிணைத்துச் சந்திக்க உள்ளோம்.
நண்பர்கள் கோவை கிருஷ்ணன், கோவை சிவராம் ஆகியோருடன் அடியேன் இணைந்து - மூவரின் கூட்டணியுடன் ஒரு முழுமையான திருமணத் தளமாக ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ விஸ்வரூபம் எடுத்துள்ளது. பதிவு செய்பவர்களுக்கு வெகு சுலபமாகவும், பெண்களைப் பெற்றவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பாகவும் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாருங்கள்... பாருங்கள்... பலன் அடையுங்கள்! அதோடு, இந்தத் தளத்தின் முகவரியை உங்கள் நண்பர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் பகிருங்கள்!
ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது எத்தனை சிரமம் என்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். மணமகனுக்கு உரிய மணமகள்கள் பட்டியலையும், மணமகளுக்கு உரிய மணமகன்கள் பட்டியலையும் இந்தத் தளத்தின் மூலம் எங்கள் குழு தேர்ந்தெடுத்துத் தருகிறபோது ஏற்படுகிற சந்தோஷம் இருக்கிறதே... அதை விவரிக்க வார்த்தைகளே போதாது.
வருகிற ஜூன் 30 வரை இந்தத் தளம் முற்றிலும் இலவசம். தளத்துக்குள் வாருங்கள்... தகுதியான வரன்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் குடும்பங்களில் விரைவில் கெட்டிமேளம் ஒலிக்க, அணிலின் சேவை போல் பணியாற்ற விரும்புகிறோம்.
உங்கள் பதிவுக்கு...
www.mahasankaramatrimony.com
www.mahasankaramatri.com
சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு... 98410 30770 என்ற இந்திய எண்ணை அழைக்கவும்.
நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா ஆசிகளுடன் உங்கள் குடும்பத்தில் விரைவில் மணமகன்/ மணமகள் அமைய எங்களின் பிரார்த்தனைகள்! எல்லோருக்கும் நல்வாழ்க்கை அமைய வேண்டுகிறோம்.
என்றும் உங்கள் சேவையில்....
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி