மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் - அரசு விதித்திருக்கிற கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு ஒரு பரீட்சார்த்த முயற்சி எடுத்தோம்.
மகாசங்கரா மேட்ரிமோனி சார்பாக வரன் பதிவு செய்யும் முகாம் - முதன் முதலாக!
கோவையில் வடவள்ளி மகாசங்கரா மினி ஹாலில் கடந்த 9.1.21 சனிக்கிழமை அன்று நடத்தினோம்.
எழுபது பேர், எண்பது பேர் வருவார்கள் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், வந்தவர்கள் எண்ணிக்கை நூறையும் தாண்டியது. அன்றைக்கு மட்டுமே நூற்றுக்கணக்கான பதிவுகள்.
‘‘மாமா... நேர்ல வந்து பதிவு பண்றப்ப ஒரு திருப்தி இருக்கு.’’
‘‘எங்களுக்கு ஆன்லைன்ல பதிவு பண்ணத் தெரியலை...’’
‘‘மாமா... உங்களை நேர்ல வந்து பார்த்துப் பதிவு பண்ணணும்னு ஆசை...’’
- இப்படிப் பல காரணங்களைத் தெரிவித்தார்கள்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. பையனைப் பெற்றவர்கள், பெண்ணைப் பெற்றவர்களுடன் திருமணம் குறித்தும், மகா பெரியவா பக்தி குறித்தும் பல விஷயங்களைக் கலந்து பேச முடிந்தது. இரு வீட்டாரின் இன்றைய மன நிலை பற்றியும் அங்கே விவாதிக்கப்பட்டது.
இந்தக் கோவை வரன் பதிவுக்கு திருப்பூர், வேலூர், சேலம், பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்தும் பலர் வந்திருந்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ‘மகாசங்கரா மேட்ரிமோனி’ மீது அவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையே இது பறை சாற்றியது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மிகுந்த விழிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் எங்களது டீம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
திருமணத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிற குடும்பங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்.
'அடுத்த முகாம் எங்கே எங்கே?' என்று பலரும் கேட்கிறார்கள்.
விரைவில் அறிவிக்கிறோம்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி