Mahasankara Matrimony







Message from our Founder

20/06/2020
அன்புடையீர்,

நமஸ்காரம்.

‘மகாசங்கரா மேட்ரிமோனி’ என்கிற பெயரில் திருமணப் பதிவுக்கான ஒரு வெப்சைட் துவங்கி, கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.4.2020) வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோம்.

புதிய முயற்சி. பலமான வரவேற்பு.

ஆம்! உங்கள் அன்பிலும் ஆதரவிலும் நாங்கள் நெகிழ்ந்து போயிருக்கிறோம். எத்தகைய வயதினரும் வெகு சுலபமான முறையில் அணுகத் தக்க வகையில் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.

மணமகன் மற்றும் மணமகள் தேவைப்படுவோர் இதில் பதிவு செய்து பலன் பெற்று வருகிறீர்கள். துவங்கிய தினம் ஆரம்பித்து, வருகிற 30.6.2020 வரை இந்தத் தளத்தின் பயன்பாடு முற்றிலும் இலவசம் என்று அறிவித்திருந்தோம். வருகிற ஜூலை முதல் தேதியில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகை இந்த சர்வீஸுக்காகப் பெறப்படும்.

விஷயத்துக்கு வருகிறேன்... கோவை வைதீக குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தங்கள் மகள் அட்சயா சந்திரசேகரனுக்காக எங்களது தளத்தில் பதிவு செய்திருந்தார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி அவர்கள் பதிவு செய்தார்கள். இரண்டு மாதங்களுக்குள்ளேயே அட்சயா சந்திரசேகரனுக்குப் பொருத்தமான ஒரு மணமகன் - அதுவும் கோவையிலேயே அமைந்து - குடும்பத்தினர்கள் பேசி, நிச்சயதார்த்தத்துக்குத் தேதியையும் (ஜூலை 12) குறித்து விட்டார்கள். வைதீகத் தொழில் கொண்டவர்கள் என்பதால், அந்தக் குடும்பத்துக்கு எந்த விதமான செலவையும் மகா பெரியவா வைக்கவில்லை போலும்! வேத நாயகன் அல்லவா பெரியவா!

இது லாக் டௌன் பீரியடு. எங்கும் வெளியே செல்வது சிரமம். என்றாலும், இல்லங்களில் இருந்தவாறே இந்த இரண்டு குடும்பத்தினரும் பேசி - பார்த்து - திருமணமும் கூடி வந்தது என்றால் அது நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளின் அருளே என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

‘மகாசங்கரா மேட்ரிமோனி’ என்கிற ராசியான எங்களது இந்தத் திருமணத் தளம், என்றென்றும் உங்களது சேவைக்காக!

நீங்கள் எதிர்பார்க்கும் பொருத்தமான வரன்கள் கிடைக்கப் பிரார்த்தனைகள்!

பதிவு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
தலைவர்/நிறுவனர்
www.mahasankaramatrimony.com