Samaparpanam - 2/4/21 - Live program by P.Swaminathan
01/04/2021
பிரபலமான தமிழ் பெண் எழுத்தாளர் அநுத்தமா.
ஒரு காலத்தில் தன் முத்திரை எழுத்துகளால் நடுத்தர வர்க்கத்தை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் இவர்.
மகா பெரியவாளுடன் இவருக்கு உண்டான அனுபவங்களை அடியேனது யூ டியூப் சேனலில் தற்போது சொல்லி வருகிறேன். இன்னமும் தொடர்கிறது.
இதில் சொல்ல ஆரம்பித்ததும், அநுத்தமாவின் உறவினர் (கிழக்கு தாம்பரத்தில் வசிப்பவர்) ஒருவர் அடியேனை மொபைலில் தொடர்பு கொண்டு தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அநுத்தமாவின் இறுதி நாட்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
கேட்டவரம்பாளையம் ஊரைப் பூர்விகமாகக் கொண்ட அன்பர் ஒருவர் (கணேஷ், கே.கே. நகர், சென்னை) அந்த ஊரில் வசிக்கிற அனைவருக்கும் இதை ஃபார்வேர்டு செய்ததாகவும், அனைவரும் இந்த விடியோவைக் கேட்டு விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மகா பெரியவா பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும்?
இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அநுத்தமா.
இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...